Monday, December 15, 2014

ஏதற்காக ?

 

 (பாருங்கள்!) உங்களிலிருந்தே ஒரு தூதர் உங்களிடம் வந்திருக்கின்றார். நீங்கள் துன்பத்திற்காளாவது அவருக்குக் கடினமாக இருக்கிறது. மேலும், உங்களுடைய வெற்றியில் பேராவல் கொண்டவராகவும், நம்பிக்கையாளர்கள் மீது அதிகப் பரிவும், கருணையும் உடையோராகவும் இருக்கின்றார்   9:128

நபியே! (சத்தியத்திற்காகச்) சாட்சியம் பகருபவராகவும், நற்செய்தி அறிவிப்பவராகவும், அச்சமூட்டி, எச்சரிக்கை செய்பவராகவும்
அல்லாஹ்வின் பக்கம் அவனுடைய அனுமதியுடன் அழைப்பு விடுப்பவராகவும், சுடர்வீசும் விளக்காகவும் நாம் உம்மை அனுப்பியிருக்கின்றோம். ,  33:45  33:46 

உண்மை யாதெனில், உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் ஓர் அழகிய முன்மாதிரி இருந்தது உங்களில் அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்புகின்றவராகவும், அல்லாஹ்வை அதிகமாக நினைவுகூருபவராகவும் இருக்கின்ற ஒவ்வொருவர்க்கும்!  33:21 

 (நபியே!) நாம் உம்மை உலகத்தாருக்கு அருட்கொடையாகவே அனுப்பியுள்ளோம் .21:107

Thursday, December 11, 2014

இது அல்லாஹ்வின் வேதமாகும்;

 அலிஃப். லாம். மீம். இது அல்லாஹ்வின் வேதமாகும்; 
இதில் யாதொரு சந்தேகமும் இல்லை, இறையச்சமுடையோர்க்கு (இது) சீரிய வழிகாட்டியாகும்.
அவர்கள் எத்தகையோர் என்றால் ‘கைப் மறைவானவற்றை நம்புகிறார்கள். மேலும் தொழுகையை நிலைபெறச் செய்கிறார்கள். நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து செலவும் செய்கிறார்கள். 
மேலும், உமக்கு இறக்கி அருளப்பட்ட வேதத்தின் (குர்ஆன்) மீதும், உமக்கு முன்னர் இறக்கியருளப்பட்ட வேதங்கள் மீதும் நம்பிக்கை கொள்கின்றார்கள். இறுதித் தீர்ப்புநாளின் (மறுமையின்) மீதும் அவர்கள் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்கள். 
 இத்தகையோரே தம் இறைவனிடமிருந்து வந்த நேர்வழியில் இருப்பவர்கள். மேலும், இவர்களே வெற்றி பெறுபவர்கள்.2:1::3 :4 :5

Monday, December 8, 2014

இறைத்தூதர்

அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் ‘உம்மீ’ நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர். 7:157

Friday, December 5, 2014

இறைவனின் மகத்துவம்


  அல்லாஹ் நித்திய ஜீவன், (பேரண்டம் அனைத்தையும்) நன்கு நிர்வகிப்பவன்; அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை. அவன் தூங்குவதுமில்லை; மேலும் சிற்றுறக்கமும் அவனைப் பிடிப்பதில்லை; வானங்களிலும், பூமியிலுமுள்ள அனைத்தும் அவனுடையவையே! அவனுடைய அனுமதியின்றி அவனுடைய திருமுன் எவர்தான் பரிந்து பேச முடியும்! அவர்களுக்கு முன்னாலிருப்பவற்றையும், அவர்களுக்குப் பின்னால் (மறைவாக) இருப்பவற்றையும் அவன் நன்கறிவான். அவன் (அறிவித்துக் கொடுக்க) நாடுவதைத் தவிர, அவன் ஞானத்திலிருந்து வேறெதையும் எவரும் புரிந்து கொள்ள முடியாது. அவனுடைய அரசாட்சி வானங்கள், பூமி அனைத்திலும் பரந்து நிற்கின்றது. அவற்றைப் பாதுகாப்பது அவனைச் சோர்வுறச் செய்வதில்லை. மேலும் அவன் மிக உயர்ந்தவனும், மகத்துவம் மிக்கவனுமாய் இருக்கின்றான் 2:255

Wednesday, December 3, 2014

உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்;



உங்கள் இறைவன் ஒரே இறைவன்தான்; அளவிலாக் கருணையும் இணையிலாக் கிருபையும் உடையோனாகிய அவனைத் தவிர வேறு இறைவன் இல்லை;2:163

 (இந்த உண்மையை அறிந்துகொள்ள சான்று வேண்டுமாயின்) வானங்கள் பூமி ஆகியவற்றின் ஒழுங்கமைப்பிலும்,
இரவும் பகலும் ஒன்றன்பின் ஒன்றாக மாறி வருவதிலும்,
மக்களுக்குப் பயன் தருபவற்றைச் சுமந்து கொண்டு கடலில் செல்லும் கப்பல்களிலும், மேலிருந்து அல்லாஹ் இறக்கி வைக்கும் மழை நீரிலும், 
பின்னர் அதைக்கொண்டு பூமியை அது இறந்து போன பின்னர்கூட உயிர்ப்பித்து மேலும் (தனது இந்த ஏற்பாட்டின் மூலம்) அதில் எல்லாவிதமான உயிரினங்களையும் பரவச் செய்திருப்பதிலும், 
காற்றுகளைச் சுழலச் செய்வதிலும், வானங்களுக்கும் பூமிக்கும் இடையே கட்டுப்படுத்தப்பட்ட மேகங்களிலும், சிந்திக்கும் மக்களுக்கு ஏராளமான சான்றுகள் இருக்கின்றன. 2:164

Sunday, November 30, 2014

அமைதி பெருக அமைதி தருக


*சாந்தி உண்டாகும் நேர்வழியைப் பின்பற்றி நடப்போருக்கு!(20:47)
* அறிந்து கொள்ளுங்கள்! அல்லாஹ்வை நினைவுகூர்வதால்தான் உள்ளங்கள் நிம்மதியடைகின்றன! (13:28)
*ஃபித்னா (குழப்பம்) செய்வது கொலையைவிடக் கொடியதாகும். 
*குழப்பம் செய்து கொண்டிருந்தோரின் முடிவு என்னவாயிற்று என்பதைக் கவனிப்பீர்களாக (2:217) ( 7:86 )

Friday, November 28, 2014

சற்று சிந்தித்துப் பாருங்கள்!

உண்மை யாதெனில், இவர்கள் வரம்பை மீறுவதிலும், சத்தியத்தைப் புறக்கணிப்பதிலும் மூழ்கிக் கிடக்கின்றார்கள்.
சற்று சிந்தித்துப் பாருங்கள்! முகங்குப்புற நடந்து செல்பவன் மிகச் சரியான வழியை அடைபவனா? அல்லது தலைநிமிர்ந்து ஒரு நேரான வழியில் நடந்து சென்று கொண்டிருப்பவனா? 
 (இவர்களிடம்) கூறும்: “அல்லாஹ்தான் உங்களைப் படைத்து, கேட்கின்ற மற்றும் பார்க்கின்ற ஆற்றல்களையும் சிந்தித்துணரும் உள்ளங்களையும் உங்களுக்கு வழங்கியுள்ளான்.” ஆனால், நீங்கள் மிகக் குறைவாகவே நன்றி செலுத்துகின்றீர்கள். 67:22, 67:23