அந்த அருளுக்குரியவர்கள் எத்தகையவர்களெனில், அவர்கள் ‘உம்மீ’ நபியாகிய இந்தத் தூதரைப் பின்பற்றுவார்கள்; இவரைக் குறித்து அவர்களிடமுள்ள தவ்ராத்திலும், இன்ஜீலிலும் எழுதப்பட்டிருப்பதைக் காண்பார்கள். இவர் நன்மை செய்யுமாறு அவர்களை ஏவுகின்றார்; தீமைகளிலிருந்து அவர்களைத் தடுக்கின்றார். மேலும், அவர்களுக்குத் தூய்மையானவற்றை அனுமதிக்கின்றார்; தூய்மையில்லாதவற்றைத் தடை செய்கின்றார். மேலும், அவர்களின் மீதுள்ள சுமையை இறக்குகின்றார்; அவர்களைப் பிணைத்திருந்த விலங்குகளையும் உடைத்தெறிகின்றார். எனவே எவர்கள் இந்நபி மீது நம்பிக்கை கொண்டு இவரைக் கண்ணியப்படுத்தி, உதவியும் புரிகின்றார்களோ, மேலும் இவருடன் இறக்கியருளப்பட்ட ஒளி யினைப் பின்பற்றுகிறார்களோ அவர்களே வெற்றியாளர்களாவர். 7:157
No comments:
Post a Comment