Thursday, November 27, 2014

உண்மை

 மேலும் உண்மை யாதெனில், ஜின் மற்றும் மனித வர்க்கத்தில் பெரும்பாலோரை நரகத்திற்காகவே நாம் படைத்திருக்கின்றோம். அவர்களுக்கு இதயங்கள் இருக்கின்றன; ஆயினும், அவற்றால் அவர்கள் சிந்தித்துணர்வதில்லை; அவர்களுக்குக் கண்கள் இருக்கின்றன; ஆயினும் அவற்றால் அவர்கள் பார்ப்பதில்லை; அவர்களுக்குக் காதுகள் இருக்கின்றன. ஆயினும் அவற்றால் அவர்கள் கேட்பதில்லை. அவர்கள் மிருகங்களைப் போன்றவர்கள்; ஏன் அவற்றை விடவும் அவர்கள் தாழ்ந்தவர்கள்! அவர்கள்தாம் அலட்சியத்தில் மூழ்கியிருப்பவர்கள். 7:179 
அல்லாஹ் மிக உயர்ந்தவன் உண்மையான அரசன். மேலும் (பாரும்) குர்ஆனை ஓத நீர் அவசரப்படாதீர்; அதனுடைய வஹி முழுமையாக உமக்கு நிறைவு பெறுவதற்கு முன்பே! “என் இறைவனே எனக்கு அதிகமான ஞானத்தை வழங்குவாயாக!” என்றும் இறைஞ்சுவீராக 20:114 

No comments:

Post a Comment